சாத்தூர் 'வைப்பாறு அழுகிறது; வைப்பாறை மீட்போம்'... சுற்றுச்சூழலை காக்க புது 'யுக்தி'

Added : பிப் 10, 2020
Advertisement

சாத்துாரில் பள்ளி மாணவர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி, ஊர்வலம், நாடகம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

வைப்பாறு அழுகிறது, வைப்பாறை மீட்போம் என்ற கருத்தரங்க நிகழ்வுகள் இதற்கு சான்றாக விளங்குகின்றன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் சாத்துார் மாசில்லா நகராக உருவாகி வருகிறது.
சாத்துார் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அடர்த்தியாக வளர்ந்திருந்த புளிய மரங்கள், வேப்பமரங்கள், கொடிக்காய் புளி, நாவல் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதால், மழையின் அளவு குறைந்து நீர்நிலைகள் வறண்டுவிட்டன.

கடல் போல் காட்சி தரும் வேண்டாங்குளம் கண்மாய், கடும் கோடைகாலத்திலும் சுவையான குடிநீர் தந்த மரிய ஊரணி மழை குறைந்ததால் வறண்டதுடன், சீமைக்கருவேல மரங்களினால் சூழப்பட்டு கருவேலங்காடாக மாறின. 10 ஆண்டுகளுக்கு முன்பு தன்னார்வலர்களின்
முயற்சியால் மரிய ஊரணி துார்வாரப்பட்டது. பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று வனத்
துறையும் வேண்டாங்குளம் கண்மாயை துார்வாரவும், சீமைக்கருவேல மரங்களை வெட்டவும் அனுமதிதத்தால் இரு நீர்நிலைகளும் புத்துயிர் பெற்றுள்ளன.

இதனால் மீண்டும் சாத்துாரில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. தற்போது மரம் வளர்ப்பது
கடமையாக எண்ணி மக்கள் தெருக்கள் தோறும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து சாத்துார் நகராட்சிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு நகராட்சி தடை விதித்துடன். பறிமுதல் செய்யும் நடவடிக்கைளையும் எடுத்து வருகின்றனர். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்கள் துணையோடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொய்வின்றி நடத்தி வருகின்றனர். மாசில்லா சாத்துார் விழிப்புணர்வடைந்த மக்களால்
சாத்தியமாகி வருகிறது.

மரம் வளர்ப்பில் ஆர்வம்

சாத்துார் நகர மக்களிடம் மரம் வளர்ப்பில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மெயின்ரோடு, பைபாஸ் ரோடு விரிவாக்கத்தின்போது நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டது. மரங்கள் இல்லாமல் போனதால் கடும் வறட்சி ஏற்பட்டதை உணர்ந்த மக்கள், தற்போது மரம் வளர்பில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். தடம், பசுமை இயக்கம், ராஜலட்சுமி கல்வி அறக்கட்டளை மூலம் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுகிறது. தடம் அமைப்பின் மூலம் தற்போது கண்மாய் கரைகளிலும், ஆற்றங்கரையிலும் 300 பனைமர விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.

-மாரிக்கண்ணன், தடம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்

விழிப்புணர்வால் முன்னேற்றம்

சாத்துார் பகுதி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மூலம் இயற்கையை பாதுகாப்போம், நெகிழியை தவிர்ப்போம் என அடுத்தடுத்து விழிப்புணர்வு ஊர்வலம், ஸ்கேட்டிங் ஊர்வலம், ஆண்டு விழாக்களில் நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால், பொதுமக்களிடையே விழிப்புணர்வும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மரம் வளர்ப்பது, குப்பையை கண்ட இடங்களில் வீசாமல் தொட்டியில் போடுவது போன்ற பழக்கங்கள் வளர்ந்து வருகிறது.கடைகளுக்கு செல்லும் போது துணிப் பை, பாத்திரம் கொண்டு செல்ல துவங்கியுள்ளனர். வருங்கால சந்ததினருக்கு நல்ல சுற்றுச்சூழலை உருவாக்கி தருவது நம் அனைவரின் கடமையாகும்.

-சங்கரேஸ்வரன், நகைக்கடை உரிமையாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X