பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய 'லோக் அதாலத்' 1,142 வழக்கு

Added : பிப் 10, 2020
Advertisement

சிவகங்கை:-சிவகங்கை மாவட்ட அளவில் நடந்த தேசிய 'லோக் அதாலத்தில்' ஆயிரத்து 142 வழக்குகள் மூலம் ரூ.2.07 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய லோக்அதாலத் தீர்வு மையத்திற்கு மாவட்ட செஷன்ஸ் நீதிபதி கார்த்திகேயன் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி ரபி, 'போக்சோ' வழக்கு சிறப்பு நீதிபதி செம்மல், குடும்ப நல நீதிபதி தமிழரசி, தலைமை குற்றவியல் நடுவர் பாபுலால், சார்பு நீதிபதி ராஜேஸ்வரி, மாஜிஸ்திரேட் பாரததேவி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் ராம்பிரபாகர், நாகேஸ்வரன், செந்தில்குமரன், காமராஜ்பாண்டியன், களஞ்சியராஜ் பங்கேற்றனர். மாவட்ட அளவில் 11 அமர்வுகள் நடத்தி குற்றவியல் வழக்கு, காசோலை மோசடி, வங்கி கடன் வழக்கு, மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் என ஆயிரத்து 142 வழக்குகள் மூலம் 2 கோடியே 7 லட்சத்து 79 ஆயிரத்து 255 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர்கள் மணிமேகலை, பானுமதி, விவேகானந்த் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இளையான்குடி:இளையான்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மன்றம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும்,நீதிபதியுமான சுனில்ராஜா தலைமையில் நடந்தது. மக்கள் நீதிமன்ற அமர்வு உறுப்பினர்கள் சிவக்குமார், அண்ணாத்துரை பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X