பொது செய்தி

தமிழ்நாடு

நடுத்தெருவிற்கு பாதை: திருப்புத்துார் மக்கள் வலியுறுத்தல்

Added : பிப் 10, 2020
Share
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துாரில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணியின் போது, அங்கிருந்து நடுத்தெருவிற்கு செல்லும் பாதையை மறைத்து வருகின்றனர். எனவே பழைய முறைப்படி அத்தெருவிற்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து பாதை விட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இங்குள்ள பழைய பஸ் ஸ்டாண்ட்அகற்றப்பட்டு, புதுப்பிக்கும் பணி நடக்கிறது. முன்பு பஸ் ஸ்டாண்டில் இருந்து நடுத்தெரு செல்வதற்கு நேரடியாக ரோடு இருந்தது. ஆனால், புதுப்பிப்பு பணியில் இத்தெருவிற்கு செல்லும் பாதையை மறைத்து, மாற்றுபாதையில் மக்களை செல்லும் வகையில் ரோடு அமைக்கின்றனர்.

இதனால், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நடுத்தெருவிற்கு செல்ல பயணிகள், மாணவர்கள் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் செய்துவிட்டனர். இதையடுத்து, பெரியகருப்பன் எம்.எல்.ஏ., வர்த்தக சங்க தலைவர் லட்சுமணன், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் அன்புசெழியன் ஆகியோர் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

பின்னர் நடுத்தெருவிற்கு வெளியில் செல்லும் ரோட்டை அகலப்படுத்தவும், படிக்கட்டு அமைத்து தரப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தில் உறுதி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X