மாநில கராத்தே போட்டி

Added : பிப் 10, 2020
Advertisement
 மாநில கராத்தே போட்டி

சிவகங்கை:சிவகங்கையில் நடந்த மாநில கராத்தே போட்டியில் சிவகங்கை அணி 2ம் இடம் பிடித்தது.சிவகங்கையில் மாநில கராத்தே போட்டி நடந்தது. போட்டியை கராத்தே பள்ளி நிறுவனர் ராஜசேகரன் துவக்கி வைத்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் முன்னிலை வகித்தார். வயது 5 முதல் 19 பிரிவினருக்கு 14 விதமான போட்டிகள் நடந்தது. இதில் மாநில அளவில் இருந்து ஆயிரத்து 800 மாணவர்கள் பங்கேற்றனர்.இப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. சிவகங்கை அணி 2ம் இடமும், தஞ்சாவூர் அணி 3ம் இடம் பிடித்தனர்.

இதற்கான பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் பரிசு வழங்கினார். கலெக்டர் ஜெயகாந்தன், கூடுதல் எஸ்.பி., மங்களேஸ்வரன் பங்கேற்றனர். மாவட்ட கராத்தே சங்க தலைவர் பரமசிவம் ஏற்பாட்டை செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X