சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவொற்றியூரில் குப்பையில் தீ: போக்குவரத்து பாதிப்பு

Added : பிப் 10, 2020
Share
Advertisement

திருவொற்றியூர்:ஒரு மணி நேரமாக பற்றி எரிந்த தீயால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவொற்றியூர், பக்கிங்ஹாம் கால்வாய் ஒட்டி, குப்பை சேகரிக்கும் தளம் உள்ளது. சில சமூக விரோதிகள் குப்பை மேட்டை ஒட்டிய பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.அது போல், வெற்றி விநாயகர் நகர், பக்கிங்ஹாம் கால்வாய் அருகே, கொட்டியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளுக்கு, நேற்று மாலை, மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர்.இதில், பிளாஸ்டிக் கழிவுகள் முழுவதும் பற்றி எரிந்து, புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், பக்கிங்ஹாம் கால்வாய் ஒட்டிய சாலை முற்றிலும், புகை மண்டலமாக மாறி, போக்குவரத்து கடுமையாக பாதித்தது.இது குறித்து, தகவலறிந்து திருவொற்றியூர் தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X