பொது செய்தி

தமிழ்நாடு

நாய்களுக்கு கு.க., ஆப்பரேஷன் செய்ய 2018 ல் ரூ.1.45 லட்சம்

Added : பிப் 10, 2020
Advertisement

காரைக்குடி:காரைக்குடியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கு.க., ஆப்பரேஷன் செய்ய எவ்வளவு செலவாகிறது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு, 2018 ல் ரூ.1.45 லட்சம் செலவாகியுள்ளதைாக, தகவல் தெரிவித்துள்ளனர்.

காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் 1.20 லட்சம் மக்கள் தொகை உள்ளது. இது தவிர சுற்றுலா, பணிக்காக தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது.இவை கடிப்பதின் மூலம் தினமும் 20 க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

வெறிநாய்கள் கடிப்பதின் மூலம் நோய் பாதித்து, உயிரிழப்பும் நேரிடுகிறது. இதை தவிர்க்க நாய்களின் எண்ணிக்கையை குறைக்க, கு.க., ஆபரேஷன் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காரைக்குடியில் இது போன்ற நடைமுறைகளை சுகாதாரப்பிரிவினர் கடைபிடிக்காததால், நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நகராட்சி கமிஷனருக்கு கேள்வி எழுப்பி உள்ளனர். அதன்படி 2017 - 18 ம்ஆண்டில் நகரில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கு.க., ஆபரேஷன் செய்த வகையில் ரூ.1.45 லட்சம் வரை செலவானதாக, தெரிவித்தனர். இது போன்று பல்வேறு புகார்களுக்கு நகராட்சி அதிகாரிகள் பதில் தராததால், பலர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். இதனால், இங்குள்ள அதிகாரிகள் விழிபிதுங்கி காணப்படுகின்றனர்.

இது குறித்து நமது உரிமை பாதுகாப்பு இயக்க நிர்வாகி பிரகாஷ் கூறியதாவது, நகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு முறையான பதில் அளிப்பதில்லை. இதனால் தகவல் உரிமை சட்டத்தை நாடுகின்றனர். கடந்த 2019 டிசம்பரில் தெருவிளக்கு பராமரிப்புக்கான செலவினம் குறித்து கேட்டதற்கு பதில் தரவில்லை. இதனால், நகராட்சிக்கு தகவல் உரிமை ஆணையம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தது. சிறுசிறு பிரச்னைகளை கூட நகராட்சியினர் தீர்த்து வைக்காத தால், இச்சட்டத்தை கையில் எடுக்கின்றனர். அதற்கும் பதில் தர அக்கறை செலுத்துவதில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X