குவளைவேலிக்கு வருமா நெல் கொள்முதல் நிலையம் | Dinamalar

குவளைவேலிக்கு வருமா நெல் கொள்முதல் நிலையம்

Added : பிப் 10, 2020
Share
மானாமதுரை:மானாமதுரை அருகே குவளைவேலியில் அரசின் நேரடி நெல் கெள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளதால் நெல்லை அறுவடை செய்த விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரை அருகே குவளைவேலியை சுற்றி 150 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டு தற்போது அறுவடை நடந்து வருகிறது. ஏராளமானவர்கள் அறுவடை செய்த நெல்லை ஏற்கெனவே கடந்த வருடங்களில் நெல் கொள்முதல்

மானாமதுரை:மானாமதுரை அருகே குவளைவேலியில் அரசின் நேரடி நெல் கெள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளதால் நெல்லை அறுவடை செய்த விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரை அருகே குவளைவேலியை சுற்றி 150 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டு தற்போது அறுவடை நடந்து வருகிறது. ஏராளமானவர்கள் அறுவடை செய்த நெல்லை ஏற்கெனவே கடந்த வருடங்களில் நெல் கொள்முதல் நிலையம் இருந்த இடங்களில் இருப்பு வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் குவளைவேலிக்கு அருகே மிளகனுார், கட்டிக்குளம், தஞ்சாக்கூர், விளத்துார், முத்தனேந்தல் போன்ற கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அங்கு நெல்கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் குவளைவேலியில் இந்த முறை இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இருப்பதால், நெல்லை திறந்தவெளியில் இருப்பு வைத்துள்ளதால், நெல் வீணாகி வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, கடந்த 10 நாள்களுக்கு முன்பே அறுவடை ஆரம்பமாகி விவசாயிகள் நெல் மூடைகளை இங்கு கொண்டு வந்து இருப்பு வைத்துள்ளனர். ஆனால் இன்னும் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான இயந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வராமலும்,பணியாளர்களை நியமிக்காமலும் இழுத்தடித்து வருகின்றனர், என்றனர்.

நுகர்பொருள் வாணிப கழக அலுவலர் ஒருவர் கூறியதாவது, கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான இயந்திரங்கள் தட்டுப்பாடாக உள்ளது. இன்னும் 2 நாட்களில் வந்தவுடன் குவளைவேலியில் கொள்முதல் நிலையம் செயல்படும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X