அடையாளம் தெரியாத உடல்கள் திருப்புவனம் போலீசார் தவிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

திருப்புவனம்:திருப்புவனம் பகுதியில் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு முன் கிடைத்த பெண்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

திருப்புவனத்தில் சில மாதங்களுக்கு முன் மணலுார் கண்மாயினுள் அழுகிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் உடல் கிடைத்தது. அதன்பின் தட்டான்குளம் தடுப்பணையிலும் ஒரு பெண் உடல் கிடைத்தது. சில நாட்கள் கழித்து வாகுடி விலக்கு அருகே எரிந்த நிலையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது

இந்த மூன்று சம்பவங்களிலும் இதுவரை இறந்தவர்கள் யார் எந்த ஊர், எப்படி இறந்தார்கள் என கண்டறிய முடியவில்லை.இதில் வாகுடி அருகே எரிக்கப்பட்ட பெண் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க கூடும் என கருதி போலீசார் வெளி மாநிலங்களுக்கும் சென்று விசாரணை நடத்தி வந்துள்ளனர். ஆனாலும் இறந்தவர்கள் யார் என இதுவரை கண்டறியமுடியவில்லை. மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் முழுமூச்சாக ஈடுபட்டும் சிறு தடயம் கூட கிடைக்க வில்லை.

போலீசார் கூறுகையில் மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை குறைவு, பார்த்திபனுாரில் மட்டும் தான் 24 மணிநேரமும் சோதனைச்சாவடியில் போலீசார் பணியில் உள்ளனர். அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுவது இல்லை. பெயரளவில் மட்டும் தான் கண்காணிக்கப்படுகிறது. இறந்த பெண்கள் அனைவரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புண்டு, மற்ற மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்தோம், இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.

தட்டான்குளம் தடுப்பணையில் கிடைத்த பெண்ணின் உடல் மட்டும்தான் ஓரளவிற்கு அடையாளம் காணும் வகையில் உள்ளது. மற்றவர்களின் அடையாளம் சுத்தமாக இல்லை. ஆனால் இன்றுவரை தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.மதுரை--ராமேஸ்வரம் வழித்தடத்தில் கண்காணிப்பு கேமரா அதிகம் பொருத்த வேண்டும், கூடுதல் சோதனை சாவடிகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும், அடையாளம் தெரியாத உடல்களை கண்டறிய தனிப்படை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X