தமிழ்நாடு

காத்திருப்பு : காரைக்குடி அரசு மருத்துவமனையில்; பார்வையாளர்கள் தங்கும் விடுதி திறப்பிற்காக

Added : பிப் 10, 2020
Advertisement

காரைக்குடி:காரைக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட பார்வையாளர் தங்கும் விடுதி கட்டி பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.

காரைக்குடி - திருச்சி ரோட்டில் உள்ள புதிய அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை மையம், தாய்சேய் நலப்பிரிவு, மகப்பேறு அறுவை சிகிச்சை, முதல்வரின் உயிர்காக்கும் சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கு சிகிச்சைக்காக தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர்.

மாதந்தோறும் 250 பிரசவம் நடக்கிறது.நோயாளிகள் வருகைக்கு ஏற்ப, பார்வையாளர்கள் வருகையும் அதிகரித்துள்ளன. இதனால், நோயாளிகளுடன் ஒருவர் மட்டுமே தங்கவேண்டி உள்ளது. மற்றவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திறந்தவெளியில் தங்குகின்றனர். இங்கு கொசுக்கடியில், விஷச்சந்துக்களின் அச்சத்தில் தங்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.

இதை தவிர்க்க, காரைக்குடி நகராட்சி சார்பில் கடந்த 2017 ல் ரூ.70லட்சத்தில் பார்வையாளர்கள் தங்கும் விடுதி கட்டினர். இங்கு தங்கும் அறை, குளியல், கழிப்பிட அறைகள் நவீன முறையில் கட்டியுள்ளனர். ஆனால், பார்வையாளர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், 3 ஆண்டாக காட்சி பொருளாகவே நிற்கிறது. இதனால், பிற மாவட்டங்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.

இக்கட்டடத்தை திறந்து பார்வையாளர்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் இக்கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அக்கறை காட்டவில்லை. பார்வையாளர்கள் நலன் கருதி இக்கட்டடத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வருக்காக காத்திருப்பு

இது குறித்து நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது, நகராட்சி நிதி 50 லட்சம் ரூபாய் திட்டத்திற்கு மேல் உள்ள கட்டடங்களை முதல்வர் தான் திறக்க வேண்டும். இது குறித்து கட்டுமான பணி முடிந்த உடனேயே அரசின் பார்வைக்கு கொண்டு சென்றுவிட்டோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X