பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடையை மூட கலெக்டர் உத்தரவு

Added : பிப் 10, 2020
Advertisement

பரமக்குடி:பரமக்குடி பெரிய பஜார் அருகில் மீன் கடை தெருவில் இயங்கிய டாஸ்மாக் கடைபொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால் கலெக்டர் வீரராகவராவ் கடையை மூட உத்தரவிட்டுள்ளார்.
பரமக்குடியின் மையப் பகுதியாக விளங்கும் பெரியகடை பஜாரையொட்டி மீன் கடைத்தெரு உள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் இயங்கி வருகிறது. இதனருகில் குடியிருப்பு வளாகம், வழிபாட்டு தலங்கள், பள்ளி மற்றும் அனைத்து வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது.இப்பகுதியில் செல்லும் மாணவர்கள்,பெண்கள் போதை ஆசாமிகளால் பாதிக்கப்பட்டு வந்தனர். வியாபாரிகள் சங்கம், அனைத்து கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் இணைந்து கடையை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கலெக்டர் வீரராகவராவ் மீன் கடைத்தெருவில் இயங்கும் டாஸ்மாக் கடையை சட்ட ஒழுங்கு, பாதுகாப்பு நலன் கருதி மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X