பொது செய்தி

தமிழ்நாடு

திறக்கப்படாத உழவர் சந்தை விலை இல்லாததால் வேதனை

Added : பிப் 10, 2020
Advertisement
 திறக்கப்படாத உழவர் சந்தை  விலை இல்லாததால் வேதனை

கமுதி:கமுதியில் 13 ஆண்டுகளாக செயல்படாமல் உழவர் சந்தை முடங்கியுள்ளதால், விவசாய நிலங்களில் விளைந்த காய்கறிகளை வெளி மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவலத்திற்கு, விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
கமுதி பகுதியில் கத்தரி, வெண்டை, தக்காளி, வாழை உட்பட காய்கறிகள் போர்வெல் தண்ணீரால் அதிகமாக விளைந்ததால், 2007 ல், கமுதி வாரசந்தை அருகே உழவர் சந்தை அமைக்கப்பட்டது. வறட்சி காரணமாக கமுதி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது. உழவர் சந்தை, வாரசந்தையாக மாற்றப்பட்டது. இந்தாண்டு போதுமான பருவமழை பெய்துள்ளதால், நிலங்களில் காய்கறிகள், பருப்பு, மளிகை பொருட்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. காய்கறிகள், பருப்பு உட்பட பொருட்களை உழவர் சந்தையில், இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்ய முடியாமல், வெளி மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவலத்திற்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். முடங்கியுள்ள கமுதி உழவர் சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X