பள்ளி மாணவிகள் பட்டி மன்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவிகள் பட்டி மன்றம்

Added : பிப் 10, 2020
Share

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே புதுவலசையில் அரபி ஒலியுல்லா பள்ளி மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது.
சிறப்பாக பேசிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.புதுவலசை அரபி ஒலியுல்லா பள்ளிகள் சார்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது. கல்விக்குழு கவுரவ தலைவர் தாசின் தலைமை வகித்தார். 'வாழ்க்கைக்குஅவசியமானது உறவா, நட்பா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. சமூக அறிவியில் ஆசிரியர் அழகேசன் நடுவராக செயல்பட்டு உறவே அவசியமானது என தீர்ப்பு வழங்கினார். மாணவிகள் அஜ்ருன்மதினா, முபிதா, ஜெய்னுல் அரபு நிஷா, ஜம்ரின் ஆகியோர் சிறப்பாக பேசி அனைவரின்பாராட்டுக்களை பெற்றனர். கல்விக்குழு கவுரவ தலைவர் தாசின், மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். இதில் ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளைபள்ளியின் தாளாளர் சாதிக் அலி, தலைமையாசிரியர்கள் குணரத்தினம் ஜெயச்சந்திரன் ஆகியோர்செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X