அரசு பள்ளியில் விளையாட்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் விளையாட்டு விழா

Added : பிப் 10, 2020
Share
 அரசு பள்ளியில் விளையாட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.மங்கலத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஒலிம்பிக் தீபத்துடன் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் ஐன்ஸ்டீன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் சசிக்குமார், ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ், நிர்வாகிகள் கந்தசாமி, ஜெயக்குமார், மதிவாணன், கண்ணன், பகுர்தீன் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X