பொது செய்தி

தமிழ்நாடு

பிப்.15ல் பரமக்குடியில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

Added : பிப் 10, 2020
Advertisement

ராமநாதபுரம்:பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் பிப்., 15ல் தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 70க்கு மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர், செவிலியர் மற்றும் லேப்டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான பணியினை தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது deormd@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ, 04567-230160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இம்முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. தங்களின் பயோடேட்டா, அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X