பொது செய்தி

தமிழ்நாடு

அரசு திட்டங்களை நிறைவேற்ற வருவாய்த்துறை ஒத்துழைப்பு தேவை

Added : பிப் 10, 2020
Advertisement
 அரசு திட்டங்களை நிறைவேற்ற வருவாய்த்துறை ஒத்துழைப்பு தேவை

திருப்புல்லாணி:அரசு திட்டங்களை நிறைவேற்ற வருவாய்த்துறையினர் ஒத்துழைக்க வேண்டும், என திருப்புல்லாணி ஊராட்சித்தலைவர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
திருப்புல்லாணி ஊராட்சித்தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக லதா (பனையடியேந்தல்),செயலாளராக கோகிலா (தாதனேந்தல்), பொருளாளராக கவிதா (லாந்தை), துணை தலைவராக செய்யது அபுதாகீர் (கோரைக்குட்டம்),துணை செயலாளராக சக்திவேல் (பனைக்குளம்) ஒருங்கிணைப்பாளராகஇளையபாரதி (மேலமடை), செயற்குழு உறுப்பினர்கள்: முத்துப்பேட்டை வியாகுல சந்தியாகு, வண்ணாங்குண்டு தியாகராஜன், தில்லையேந்தல் கிருஷ்ணமூர்த்தி, களிமண்குண்டு வள்ளி, திருப்புல்லாணி கஜேந்திரமாலா, காஞ்சிரங்குடி முனியசாமி, உத்தரவை கணேஷ்மாயாகுளம் சரஸ்வதி, வேலானுார் நாகராஜன், வெள்ளா ஆறுமுகவள்ளி,பெரியபட்டினம் அக்பர் ஜான்பீவி, குதக்கோட்டை கோபி, களரி செந்தமிழ் செல்வி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.தீர்மானங்கள்: மாதம் ஒருமுறை கலெக்டர் தலைமையில் ஊராட்சியின் குறைகளை தீர்க்க கூட்டம் நடத்த வேண்டும்.
கிராம ஊராட்சியில் உள்ளஅலுவலர்களுக்கும், ஊராட்சி தலைவர்களுக்கும் நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அரசு தொடர்பான திட்டங்களை செயல்படுத்திட வருவாய்த்துறையினர் ஒத்துழைக்க வேண்டும். ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை நீக்கி, பழைய நடைமுறையை கொண்டுவரவேண்டும். உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பள்ளப்பச்சேரி ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X