பொது செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இருளில் நோயாளிகள் தவிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இருளில் நோயாளிகள் தவிப்பு

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் மின்தடை நேரத்தில் இருளில் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராம மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு,பிரசவ வார்டு, சித்தா பிரிவுகள் இயங்கி வருகிறது. உள்நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக 60 படுக்கை வசதிகள் உள்ளது. தினமும் சுமார் 600க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் மின்தடை ஏற்படும் போது மின்விளக்குகள் எரியாமல் இருளில் தவிக்கின்றனர்.
மின்தடை நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் ஒருசில அறைகளுக்கு மட்டும் மின் வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற அறைகள் இருளில் மூழ்கிறது.உள்நோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மின்சார வசதியில்லாமல் மின் விசிறிகள் இயங்காததால், நோயாளிகள் துாக்கம் இன்றி தவிக்கின்றனர். கொசுக்கடியால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். சிலர் பணம் செலவு செய்து தனியார் மருத்துவமனைக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது நோயாளிகள் நலன்கருதி மருத்துவமனையில் மின்தடை நேரத்தில் மின்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X