பொது செய்தி

தமிழ்நாடு

இன்று நேரில் ஆஜராக நடிகர் விஜய்க்கு சம்மன்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (70)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.





'பிகில்' படத்திற்காக வாங்கிய சம்பளம் தொடர்பாக கடந்த வாரம் நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து வந்த வருமான வரித்துறை, தொடர்ந்து 2 நாட்கள் விடிய விடிய விசாரணை நடத்தியது. சோதனையில் விஜய் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும், பணம் ஏதும் கைப்பற்றபடவில்லை எனவும் இரு வேறு விதமாக தகவல் வெளியானது. சோதனைக்கு பிறகு கடந்த 2 நாட்களாக விஜய் வழக்கம் போல் படப்பிடிப்பிற்கு சென்றார்.




இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று (பிப்.,10) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரம், ஏஜிஎஸ் நிர்வாகிகள் ஆகியோரும் இன்று ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-பிப்-202020:47:05 IST Report Abuse
தமிழ்வேல் ரெட்டி, ராவு............ வரிசையில இதுவும் நீர்த்துப் போவும்.
Rate this:
Share this comment
Cancel
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
10-பிப்-202019:11:58 IST Report Abuse
புதுகை வானம்பாடி இந்த வீனா போன விஜய் ரசிகர்கள் இனியாவது விஜய் பின்னாடி அலைவதை விட்டு திருந்துவார்களா ..........................1975 முதல் 1985 வரை சிகரட் பிடித்து ஸ்டைல் காட்டி இன்றைய 55 to 65 வயது அண்களை கெடுத்த நடிகரை இன்று யோக்கியன் போல ஆன்மிகம் பேசும் நடிகரை என்னவென்று சொல்வது ..........
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
10-பிப்-202017:52:12 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை ரஜினி அரசியலுக்கு வரலாம். எங்க தளபதி விஜய் வரக்கூடாதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X