இந்த செய்தியை கேட்க
பீஜிங் : உலக அளவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 904 ஆக அதிகரித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. மேலும் 40,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் இறுதி முதல் இதுவரை 28 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. சீனாவில் அதிகபட்சமாக ஹூபி பகுதியில் மட்டும் கொரோனா வைரசிற்கு இதுவரை 871 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரசிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளார்.கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலையும் மோடி தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் ஹூபி பகுதியில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற தேவையான ஏற்பாடுகளை செய்ததற்காக சீனாவிற்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளதாகவும் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE