பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் போக நெல் சாகுபடி: காலிங்கராயன் பாசனத்தில் நடவு தீவிரம்

Added : பிப் 10, 2020
Advertisement

ஈரோடு: காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில், இரண்டாம் போக நெல் சாகுபடியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பவானிசாகர் அணை மூலம், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில், 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது பெரும்பாலான பகுதிகளில், முதல் கட்ட நெல் அறுவடை நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாம் போக சாகுபடி பணி தொடங்கியுள்ளது. குறிப்பாக கருங்கல்பாளையம், வைராபாளையம், கிருஷ்ணம்பாளையம், சுண்ணாம்பு ஓடை, பாலக்காட்டூர், பி.பெ.அக்ரஹாரம், ஆர்.என்.புதூர் பகுதிகளில், வயல்களில் ஈரப்பதம் உள்ளதால், உழவுப் பணியில் விவசாயிகள் தீவிரமாகியுள்ளனர். சில பகுதிகளில் நாற்றங்கால் பணி முடித்து, நடவுப்பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து வைராபாளையம் விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், பவானிசாகர் அணையில் இருந்து, தாமதமின்றி தண்ணீர் திறக்கப்பட்டது. தை மாத துவக்கத்திலேயே, முதல் போக விளைச்சலை முடித்து விட்டோம். தற்போது இரண்டாம் போக விவசாய பணி தொடங்கப்பட்டுள்ளது. 90 நாள் பயிரான பி.பி.டி., பொன்னி ரகம், அதிகளவில் நடவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X