பொது செய்தி

தமிழ்நாடு

நோயின் பிடியில் சிக்கி தவிக்கும் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் நிதி

Added : பிப் 10, 2020
Advertisement

ஈரோடு: சேலம் மாவட்டம், காகாபாளையம், ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் கோபாலகண்ணன், 42; கட்டட தொழிலாளி. இவரின் மனைவி மஞ்சுளா, 31; தம்பதியருக்கு ஒன்பது வயதில் மகள், ஏழு வயதில் மகன் உள்ளனர். கடந்த, 2014ல் கோபால கண்ணன் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, தலையில் பிளைவுட் விழுந்தது. அப்போது கண்டு கொள்ளாத நிலையில், கடந்த ஆண்டு நரம்பு மண்டலம் பாதித்து, படுத்த படுக்கையானார். இதனால் மனைவி மஞ்சுளா, துப்புரவு பணியாளர் வேலைக்கு சென்று, குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் மஞ்சுளாவை, புற்றுநோய் தாக்கியது. சாப்பாடு சாப்பிட முடியாமல், டியூப் வழியாக கூழாக சாப்பிடுகிறார். மகளும் வலிப்பு நோய்க்கு ஆளாகினார். நோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தின் நிலை குறித்து, நமது நாளிதழில் செய்தி வந்தது. மஞ்சுளா குடும்பத்துக்கு பலர் பணமாக, காசோலையாக அனுப்பி உதவினர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ?? ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்கான காசோலை அனுப்பி வைக்கப்பட்டதாக, சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் குமாரசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X