பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : பிப் 10, 2020
Advertisement

தர்ப்பண மண்டபம் அமைக்க கோரிக்கை: ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில், அமாவாசை நாட்களில், தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். தை, ஆடி அமாவாசைகளில் ஆயிரக்கணக்கானோர் வருவர். எவ்வித வசதியும் இல்லாததால், ராகவேந்திரர் கோவில் வாசல், சோழீஸ்வரர் கோவில் வாசல், மின் மயான சாலை, காவிரி பாலம் அருகே ஒற்றைப்படித்துறையில் தர்ப்பணம் செய்கின்றனர். எனவே, கருங்கல்பாளையம் காவிரி கரையில், நிரந்தரமாக தர்ப்பண மண்டபம் கட்டித்தர கோரிக்கை எழுந்துள்ளது.
அரசுப்பள்ளி சுவரில் விரிசல்: கோபி அருகே கரட்டடிபாளையத்தில், யூனியன் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் முன்பகுதி சுற்றுச்சுவரில் விரிசல் விழுந்துள்ளது. பல ஆண்டுகளாக, இதே ஸ்திரத்தன்மையுடன் காணப்படுவதாக, பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இடிந்து விழுந்து லட்சக்கணக்கில் செலவு வைக்கும் முன், ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கும்போதே, சில ஆயிரங்களை செலவு செய்து, பராமரிக்கலாமே? என்பது அப்பகுதி மக்களின் யோசனையாக உள்ளது.

வாய்க்காலில் குப்பை தொட்டி: மொடக்குறிச்சி யூனியன், அட்டவனை அனுமன்பள்ளி பஞ்., அண்ணாநகரில் உள்ள குப்பைத்தொட்டி, பல நாட்களாக வாய்க்காலில் விழுந்து கிடக்கிறது. இதனால் சாலையோரம் கண்ட இடங்களில், மக்கள் குப்பை கொட்டிச் செல்கின்றனர். தொட்டி கிடப்பதால், பலர் வாய்க்காலில் குப்பை கொட்டி, வேதனையை அதிகரிக்கின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம், குப்பைத்தொட்டியை மீட்டு, உரிய இடத்தில் வைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

சரணாலய சாலை ஜல்லியா கிடக்குது: வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு, சென்னிமலை சாலையில் இருந்து, 1.5 கி.மீ., தூரத்துக்கு உரிய சாலை வசதியில்லை. ஆனால் இந்த வழியாக, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன் சாலை அமைக்க ஜல்லி கொட்டினர். அதன் பிறகு, சாலை அமைக்க மறந்து விட்டனர். இதனால் இரவில் டூவீலர்களில் செல்வது, கடும் சவாலாக உள்ளது. சென்னிமலை யூனியன் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X