பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்., சொத்துகளை மீட்க வேண்டும்: ஆனந்தம்பாளையம் மக்கள் புகார் மனு

Added : பிப் 10, 2020
Advertisement

மொடக்குறிச்சி: காணாமல்போன பஞ்சாயத்து சொத்துகளை மீட்க வேண்டும் என்று, ஆனந்தம்பாளையம் மக்கள், கலெக்டர் கதிரவனிடம், நேற்று மனு கொடுத்தனர்.
ஈரோடு கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு சென்று, கலெக்டர் கதிரவனிடம், செல்லாத்தாபாளையம் மக்கள், நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மொடக்குறிச்சி யூனியன், ஆனந்தம்பாளையம் பஞ்சாயத்தில், ஒன்பது வார்டுகளில், 6,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த, 2006ம் ஆண்டு முதல், பஞ்., சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்கள் முறையாக பராமரிக்கவில்லை. தற்போது பஞ்., தலைவராக பொறுப்பேற்றுள்ள காயத்ரியிடம், பொறுப்பு, பஞ்., சொத்துக்களை ஒப்படைப்பதில் பிரச்னை எழுந்துள்ளது. குறிப்பாக பல லட்சம் ரூபாய் மதிப்பு மின் மோட்டார், பம்பு செட்டுகள், கைப்பம்புகள், போர்வெல் தண்ணீர் குழாய்களை காணவில்லை. அனைத்திலும் முறைகேடு நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. பஞ்., சொத்துகளை மறைக்கவே, சொத்துக்கள் பதிவேட்டை பராமரிக்கவில்லை. கடந்த, 2006 முதல் 2016 வரை, சொத்துகள் பதிவேடு சம்மந்தமாகவும், வரி வசூல் தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து, பஞ்.,ல் வாங்கப்பட்ட, உருவாக்கப்பட்ட சொத்துகள் எவ்வளவு? களவாடப்பட்ட சொத்துகள் எவ்வளவு? என்று கண்டுபிடிக்கவேண்டும். அந்தந்த கால கட்டத்தில் பதவியிலிருந்த தலைவர், செயலர் மற்றும் யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X