சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோதூரில் சிறுத்தை நடமாடியதாக பரபரப்பு: வனக்குழு கண்காணிப்பில் 'புஸ்ஸ்'

Added : பிப் 10, 2020
Advertisement

கோபி: சிறுத்தை நடமாடியதாக, வெளியான தகவலால், மோதூரில் பரபரப்பு ஏற்பட்டது.
டி.என்.,பாளையம், கொங்கர்பாளையம் அருகே கொழுஞ்சிக்காட்டை சேர்ந்த ராசன் என்பவரின், ஆடு மற்றும் நாயை, கடந்த மாதம், 31ல் சிறுத்தை கொன்றது. கடந்த, 1ல் சின்னக்கொடிவேரியை சேர்ந்த குமார் என்பவரின், வெள்ளாட்டை கொன்றது. அதே இரவில் பெரியகொடிவேரி அருகே பீட்டர் என்பவரின், இரண்டு மாத கன்றுக்குட்டி, சிறுத்தைக்கு பலியானது. அடுத்தடுத்த அரங்கேறிய சிறுத்தையின் அட்டகாசத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேமராக்கள் அமைத்தும், கூண்டு வைத்தும், தீவிரமாக கண்காணித்தும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், டி.என்.,பாளையம் அருகே மோதூரில், சிறுத்தை நடமாடியதாக, வனத்துறைக்கு நேற்று காலை தகவல் சென்றது. சரஸ்வதி என்பவரின் தோட்டத்துக்கு, வனக்குழுவினர் விரைந்தனர். சோளக்காட்டு வரப்பில் சிறுத்தை போன்ற விலங்கு சென்றதாக, சரஸ்வதி தெரிவித்தார். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சோளக்காட்டுக்குள் இருந்த கால்தடங்களை ஆய்வு செய்ததில், நாயின் கால்தடம் என தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X