சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பியில் உரசி வைக்கோல் வேனில் தீ; போராடி தீயணைப்பு; ஈரோட்டில் பரபரப்பு

Added : பிப் 10, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், வைக்கோல் ஏற்றிச்சென்ற மினி லாரி, மின் கம்பிகள் மீது உரசியதில், எரிந்து சேதமானது.
தர்மபுரி மாவட்டம், துறிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன், 40; ஈரோட்டை அடுத்த கனகபுரம் பகுதியில், வைக்கோல் கொள்முதல் செய்தார். ஈச்சர் வேனில் ஏற்றிக் கொண்டு, நேற்று புறப்பட்டார். வேனை செந்தில்குமார், 32, ஓட்டினார். ஈரோட்டில், சென்னிமலை சாலையில், சேனாபதிபாளையம் அருகில், நேற்று காலை, 12:30 மணியளவில் வந்தபோது, சாலை நடுவில் சென்ற மின் கம்பிகள் மீது வைக்கோல் உரசியதில் தீப்பிடித்தது. இதை அறியாமல் டிரைவர் ஓட்டிச் சென்றார். சிறிது தூரம் சென்ற நிலையில், புகை வருவதை கண்டு சாலையோரம் நிறுத்தினார். தீயை அணைக்க முயன்றதில் செந்தில்குமார் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்து இரு வாகனங்களில் சென்ற, ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி அணைத்தனர். ஆனாலும், விபத்தில், பெரும்பாலான வைக்கோல், வேனின் பின்பகுதி பாதி எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நீடித்தது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X