பொது செய்தி

தமிழ்நாடு

தேரோட்டம் கோலாகலம்

Added : பிப் 10, 2020
Advertisement

ஓமலூர்: இரண்டாம் நாள் தைப்பூச தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் வடம்பிடித்து, தேரை இழுத்தனர். தைப்பூசத்தையொட்டி, தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், மூன்று நாள் தேரோட்டம், நேற்று முன்தினம் தொடங்கியது. அதில், திரளான பக்தர்கள், நிலையிலிருந்து, அண்ணாதுரை சிலை வரை, தேரை இழுத்து வந்து நிறுத்தினர். தேரில், சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரண்டாம் நாளாக, நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. அதில், பக்தர்கள் பலர், பஸ் ஸ்டாண்ட் வரை இழுத்து வந்தனர். கைலாசநாதர் தேரின் முன், சிறு தேரில், வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சியளித்தனர். அந்த தேரை, பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். அதன் முன், செண்டை மேளம் முழங்க, சிவன், பார்வதி வேடத்தில் நடன நிகழ்ச்சி நடந்தது. இன்று, தேர் நிலைநிறுத்தம் செய்து, சுவாமியை கோவிலுக்கு அழைத்து வரும் விழா நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X