பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை பூங்கா வளாகத்தில் 224 அரங்கு: ஏராளமான பொதுமக்கள் கண்டுகளிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

ஆத்தூர்: தலைவாசல், வி.கூட்ரோடு ஆட்டுப்பண்ணை வளாகத்தில், சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரிக்கு, முதல்வர் பழனிசாமி, நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, விவசாய பெருவிழா நிகழ்ச்சியையொட்டி, கால்நடை பூங்கா வளாகத்தில், கால்நடை பராமரிப்பு, கால்நடை மருத்துவ பல்கலை, ஆவின் நிறுவனம், வேளாண் துறை என, 224 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதில், எம்.எல்.ஏ.,க்கள், சேலம் மேற்கு வெங்கடாஜலம், கெங்க வல்லி மருதமுத்து, ஆத்தூர் சின்னதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஒன்றிய தலைவர்கள் தலைவாசல் ராமசாமி, ஆத்தூர் லிங்கம்மாள், மாவட்ட கவுன்சிலர் ராஜா, சேலம் மேற்கு ஒன்றிய செயலர் ராஜூ, வாழப்பாடி ஒன்றிய குழு தலைவர் சதீஷ்குமார், மாவட்ட வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க துணைத்தலைவர் குபேந்திரன், ஒப்பந்ததாரர் சந்திரசேகரன், வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர். இன்று, நாளை, விவசாய பெருவிழா நடக்கிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, கால்நடை மருத்துவ துறையிலுள்ள வாய்ப்பு குறித்து, பயிற்சியளிக்கப்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X