பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : பிப் 10, 2020
Advertisement

திருகு இல்லாததால் வீணாகும் குடிநீர்: கொளத்தூர், காவேரிபுரம் ஊராட்சி, கோவிந்தப்பாடியில், கத்திரிப்பட்டி பிரிவு சாலை அருகே, அப்பகுதி கடைக்காரர்கள் பயன்பாட்டுக்கு, பொதுக்குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திருகு உடைந்து, பல வாரமாகியும், புதிதாக பொருத்தப்படவில்லை. குடிநீர் வெளியேறுவதை தடுக்க, மக்கள் மரக்குச்சியை குழாயில் திணித்துள்ளனர். குச்சியை எடுத்து விட்டு தண்ணீர் பிடிப்பதால், அதிகளவில் குடிநீர் வெளியேறி வீணாகிறது. குழாய்க்கு திருகு பொருத்த வேண்டும்.
விளக்கு பொருத்த நடவடிக்கை தேவை: சங்ககிரி, சந்தைப்பேட்டை, 10வது வார்டில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள ரேஷன் கடை முன், சாலையோரமுள்ள மின்கம்பத்தில், விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால், அப்பகுதியில், இரவில் செல்லவே, பெண்கள் அச்சப்படுகின்றனர். குற்றச்சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதோடு, சாலையோரம் விளையாடும் குழந்தைகள் விபத்துக்குள்ளாகும் ஆபத்து உள்ளது. அதானல், உடனடியாக மின்விளக்கு பொருத்த வேண்டும்.

மின்மாற்றி அருகே சருகால் ஆபத்து: மேட்டூர், சதுரங்காடி, காந்தி சிலை பகுதியிலிருந்து, பெருமாள் கோவில் செல்லும் சாலையோரம், அனல்மின் குடியிருப்பு உள்ளது. அதனருகே, மின்மாற்றி உள்ளது. அங்கு, சிலர் காய்ந்த சருகு, மரக்கிளைகளை கொட்டியுள்ளனர். தற்போது, வெயில் வாட்ட தொடங்கியதால், சருகுகள் தீப்பற்றி எரிந்தால், மின்மாற்றிக்கு பரவி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், அங்கு காய்ந்த சருகுகள் கொட்டுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபத்தான பயணம் வேண்டாமே...: தலைவாசலில் உள்ள ஊனத்தூர், வரகூர், புத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளிலிருந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு, தினமும் ஏராளமானோர் செல்கின்றனர். அவர்கள் காலை, மாலையில், பஸ்களின் படிகளில் தொங்கியபடியே பயணிக்கின்றனர். குறிப்பாக, இடநெருக்கடி மட்டுமின்றி, சில நேரங்களில் விளையாட்டுத்தனமாக, மாணவர்கள் பயணிக்கின்றனர். இதனால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், படியில் நின்று பயணிப்பதை, மாணவர்கள் தவிர்க்க, பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு: ஓமலூர் அரசு மருத்துவமனை சாலையில், பி.டி.ஓ., அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், பேரூராட்சி, சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. குறுகிய சாலையில், போக்குவரத்து அதிகமாக உள்ளது. மருத்துவமனை அருகே, செப்டிக் டேங்க், சொர்க்க ரதம், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள், சாலையோர கடைகள் என, ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், ஆம்புலன்ஸ் எளிதாக மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்லமுடிவதில்லை. இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X