பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீனிவாச கல்யாண வைபவம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement

சேலம்: சேலம், சோனா தொழில்நுட்ப கல்லூரி மைதான பிரத்யேக மேடையில், ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம், நேற்று மாலை தொடங்கியது. உற்சவர் ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச்செய்தனர். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி, யாகம் செய்து, மேள, தாளத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. முகூர்த்த பட்டாடைகள், உற்சவர் சுவாமிகளுக்கு, சாத்துபடி செய்யப்பட்டது. உற்சவர் சுவாமிகளின், கோத்திரம், நட்சத்திரம் உள்ளிட்டவைகளை கூறி, கன்னிகாதானம் செய்து வைத்தனர். பின், ஸ்ரீனிவாச பெருமாள் கரத்திலிருந்த இரு மங்கள நாண் கயிருக்கு, மஞ்சள், குங்குமம் சகிதமாக, கற்பூர தீபாராதனை நடந்தது. கெட்டிமேளம், வேத மந்திரம் ஒருசேர முழங்க, பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு, அடுத்தடுத்து மங்களநாண் அணிவித்து, திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக, காலை, சுப்ரமணிய நகர் முருகன் கோவிலிலிருந்து, உற்சவர் சுவாமிகள் வீதியுலா வந்து, திருமண மேடையை அடைந்தது. அதில், முதல்வர் பழனிசாமி தரிசனம் செய்தார். மேலும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சோனா கல்வி குழும தலைவர் வள்ளியப்பா, செயலர் கார்த்திகேயன், பொருளாளர் சுப்ரமணியன் உள்பட கமிட்டி நிர்வாகிகள், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, சோனா கல்வி குழுமம், ஸ்ரீனிவாச திருக்கல்யாண கமிட்டி, திருமலை திருப்பதி ஸ்ரீனிவாச கல்யாணம் புராஜெக்ட் இணைந்து செய்திருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X