அனைவருக்கும் ஒரே மாதிரி கல்வி: தமிழக கவர்னர் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனைவருக்கும் ஒரே மாதிரி கல்வி: தமிழக கவர்னர் வலியுறுத்தல்

Added : பிப் 10, 2020
Share

சேலம்: ''அனைவருக்கும் ஒரே மாதிரி கல்வி கிடைக்க செய்ய வேண்டும்,'' என, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.
சேலம், மெய்யனூரிலுள்ள, தனியார் பள்ளியில் நேற்று நடந்த விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது: தமிழகத்தில், உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை, 49.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதற்கு, புது கல்லூரிகள், பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டதே காரணம். கல்வி இல்லையெனில், வாழ்க்கை வீணாகிவிடும். உலக அளவில், தமிழக பள்ளி, கல்லூரிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும். அதேநேரம், பாகுபாடற்ற, அனைவருக்கும் ஒரே மாதிரி கல்வி கிடைக்க செய்ய வேண்டும். தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி, அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டபோது, அதன் ஊழியர்களுக்கு, 'டிப்ஸ்' கொடுக்காமல், அவரை ஆரத்தழுவி பேசினார். அதேபோல், பெற்றோருக்கு நன்றி சொல்லி பழகுங்கள். விரைவில், புது மாற்றத்தை உணர்வீர்கள். ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், மரக்கன்றுகள் நட வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் இருவருமே, புத்தகங்களை அதிகம் படித்து, நல்லறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதை, இன்று முதல் பின்பற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X