ஓமலூர் - தர்மபுரி சாலை அளவீடு பணி ஆரம்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓமலூர் - தர்மபுரி சாலை அளவீடு பணி ஆரம்பம்

Added : பிப் 10, 2020
Share

ஓமலூர்: ஓமலூர் - தர்மபுரி சாலை விரிவாக்கம் செய்ய, முதல்கட்டமாக அளவீடு பணி தொடங்கியுள்ளது. சேலம் - தர்மபுரி பிரதான சாலையில், முக்கியமான இடமாக ஓமலூர் உள்ளதால், அப்பகுதிக்கு வரும் வாகனங்கள், மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. ஆனால், ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்படுகிறது. நீண்ட தூரம் செல்லக்கூடிய வெளியூர் பஸ்கள், பஸ் ஸ்டாண்ட் எதிரே, சிறு இடத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்துக்கு போதிய இடவசதியின்றி, பயணியர் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் மூலம், ஓமலூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரஞ்சித் தலைமையில் பணியாளர்கள், நேற்று, ஓமலூர், சரபங்கா ஆற்றிலிருந்து, ஆர்.சி.செட்டிப்பட்டி வரையுள்ள பிரதான சாலை இருபுறமும், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை கணக்கீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'போக்குவரத்துக்கு இடையூறின்றி, சாலை மேம்பாடு செய்ய, அளவீடு பணி தொடங்கியுள்ளது. ஒப்புதல் பெறப்பட்டு பின், தேவையான பணி மேற்கொள்ளப்படும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X