பொது செய்தி

தமிழ்நாடு

சுட்டெரிக்கும் வெயில் சாலைகளில் 'கானல்நீர்'

Added : பிப் 10, 2020
Advertisement

வீரபாண்டி: சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால், நான்கு வழிச்சாலைகளில், 'கானல் நீர்' தென்படுகிறது.
நடப்பாண்டு, சேலத்தில் பிப்ரவரி முதல் வாரம் முதல், வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சில நாளாக, அனல் காற்றுடன் சுட்டெரித்து தகிப்பதால், சாலைகளில், 'கானல் நீர்' தென்படுகிறது. இதனால், பகலில் நான்கு வழிச்சாலைகளில் செல்பவர்கள், கையில் குடை, கண்களுக்கு குளிர்கண்ணாடி, தலைக்கவசம், பெண்கள் கூடுதலாக கையுறை போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் நடமாட தொடங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும், நான்கு வழிச்சாலைக்கு, ஏராளமான மரங்களை வெட்டினர். அதற்கு பதிலாக, சாலை நடுவே சிறு அரளி செடிகளை நட்டு வைத்துள்ளனர். அதனால், காற்று மாசுபடுவதை தடுக்க முடிகிறதே தவிர, நிழல் தரமுடிவதில்லை. மேலும், சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, பட்டர்பிளை மேம்பாலத்திலிருந்து சங்ககிரி வரை, சாலையோர மரங்கள் வெட்டப்பட்டதால், தற்போது அனல் காற்று டன் கொளுத்தும் வெயிலால், காலை, 10:00 மணிக்கே, சாலைகளில், 'கானல் நீர்' காட்சியளிக்க தொடங்கி விடுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டி கள், நிழலுக்கு ஒதுங்கக்கூட வழியின்றி, தகிக்கும் வெயிலில் அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், இடவசதி உள்ள பகுதிகளில், சாலையோர பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X