பொது செய்தி

தமிழ்நாடு

'கிராமத்திலிருந்து தான் அடுத்த தலைமுறை வீரர்கள் வருவர்'

Added : பிப் 10, 2020
Advertisement

ஆத்தூர்: ''அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள், சிறு நகரங்கள், கிராமங்களிலிருந்து தான் வரவுள்ளனர்,'' என, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட் பேசினார்.
வாழப்பாடி அருகே, சேசன்சாவடி, காட்டுவேப்பிலைப்பட்டியில், சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில், 16 ஏக்கரில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை, முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவர் பி.ஸ்ரீனிவாசன் வரவேற்றார். இதில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவருமான ராகுல் டிராவிட் பேசியதாவது: இந்தியாவில், பெரும்பாலான நகரங்களில் கிரிக்கெட் விளையாட்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள், சிறு நகரங்கள், கிராமங்களிலிருந்து தான் வரவுள்ளனர். சேலத்தில், சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. ஆனால், இந்த மைதானத்தில், என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தம். சென்னை, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட நகரங்களை தொடர்ந்து, சேலத்திலும், சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இது, கிரிக்கெட் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும். சேலத்தை சேர்ந்த பந்து வீச்சாளர் நடராஜன், இளம் வீரர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார். சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள், திறமையாக விளையாடி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களுக்கு, இங்கு பயிற்சியளிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் என்.ஸ்ரீனிவாசன் பேசுகையில், ''கிரிக்கெட் மைதானத்தை, முதல் முறையாக, ஒரு முதல்வர் திறந்து வைத்த பெருமை, பழனிசாமியை தான் சேரும். சேலத்திலுள்ள மைதானம், இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது. இங்கு, சி.எஸ்.கே., - ஐ.பி.எல்., உள்ளிட்ட சர்வதேச போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வீரர்கள் தங்குமிடம், உடை மாற்றும் அறை போன்ற வசதிகளை, தமிழக முதல்வர் செய்து கொடுத்தால், கிரிக்கெட் வீரர்களுக்கு பயனாக இருக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X