தேங்கிய கழிவுநீரால் பாதசாரிகள் அவதி| Dinamalar

தேங்கிய கழிவுநீரால் பாதசாரிகள் அவதி

Added : பிப் 10, 2020
Share

சேலம்: கோரிமேட்டில், சாலையில் தேங்கிய கழிவு நீரால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். சேலத்திலிருந்து ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில், கோரிமேடு தர்கா அருகே, சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சிக்கு, வாகன ஓட்டிகள், மக்கள் புகாரளித்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், ஒரு மாதமாக, கழிவுநீர் சாலையில் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அச்சாலையில் செல்லும் பாதசாரிகள், மூக்கைப்பிடித்தபடி செல்கின்றனர். மேலும், வாகனங்கள் செல்லும்போது, கழிவுநீர் பாதசாரிகள் மீது தெறிக்கின்றன. இதனால், சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்ய, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X