பொது செய்தி

தமிழ்நாடு

திருமயம் ஜல்லிக்கட்டில் 25 பேர் காயம்

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement

புதுக்கோட்டை: திருமயம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் போது, 25 பேர் காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை, திருமயம் அருகே குலமங்கலம் மலையகோவிலில், தை திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. இதில், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 600 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க, 250 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில், 25 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த போட்டியில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரில் கண்டு ரசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலசுப்பிரமணியன் அ. ஜல்லிக்கட்டு தகுந்த பாதுகாப்புடன் விளையாடவேண்டும், அரசு மற்றும் நீதிமன்றமும் வழிமுறைகளை வகுத்திருக்கின்றன. இவைகளை சரியாக பின்பற்றாவிடில் ஆபத்துக்கள் ஏற்பட ஏதுவாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X