சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது

Added : பிப் 10, 2020
Advertisement

ஆம்பூர்: ஆம்பூரில், கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற இரண்டு வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பனங்காட்டூரை சேர்ந்தவர் கிரண், 30. இவர், ஆம்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல், கடையில் இருந்தார். அப்போது, அங்கு, 23, வயது மதிக்கத்தக்க, வாலிபர் ஒருவர் நகைகளை கொடுத்து பணம் தரும்படி கேட்டார். கிரண் அதை சோதித்து பார்த்தபோது, கவரிங் நகை என, தெரியவந்தது. உடனே, இது குறித்து கிரண், ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் சென்று, வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மன்னாடிபட்டியை சேர்ந்த சின்னதம்பி மகன் அறிவரசன், 23, என்பதும், போலி நகைகளை அடகு வைத்து, மோசடி செய்ய முயன்றதும் தெரியவந்தது. அவருக்கு போச்சம்பள்ளியை சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன், 25, மற்றும், ஒரு பெண் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அறிவரசன், மணிகண்டன், இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெண்ணை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X