அரிசி ஆலைக்குள் யானைகள் அட்டகாசம்: 6 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரிசி ஆலைக்குள் யானைகள் அட்டகாசம்: 6 பேர் காயம்

Added : பிப் 10, 2020
Share

குடியாத்தம்: குடியாத்தம் அருகே, அரிசி ஆலைக்குள் புகுந்த யானைகள் கூட்டம், நெல் மூட்டைகளை சூறையாடி நாசம் செய்தன.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன், ஆந்திர வனப்பகுதியிலிருந்து, 30 யானைகள் வந்தன. அதில், 15 யானைகள் ஒரு கூட்டமாகவும், தலா மூன்று யானைகள் வீதம், ஐந்து கூட்டமாகவும் பிரிந்து சென்றுள்ளன. இதில், காட்பாடி டெல் பகுதியில், 15 யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. மூன்று யானைகள் கொண்ட கூட்டம், குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடியில், மணி என்பவரது, அரிசி ஆலைக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்து, நெல் மூட்டைகளை துவம்சம் செய்து தின்றன. தகவலறிந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன், பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர். இதேபோன்று கொத்தூரை சேர்ந்த ஆறு பேர், மூன்று பைக்குகளில் அப்பகுதியில் சென்றனர். அவ்வழியாக வந்த மற்றொரு மூன்று யானைகள் கொண்ட கூட்டம், அவர்களை தாக்க முயன்றன. அவர்கள், தப்பியோடியபோது, கீழே விழுந்ததில் ஆறு பேரும் காயமடைந்தனர். தனகொண்டபள்ளி பகுதியில், குப்புசாமி என்பவரது விவசாய நிலத்தில் குட்டியுடன் வந்த யானை, அங்கிருந்த வாழை மரங்களை நாசம் செய்தது. யானைகள் அட்டகாசத்தால், அப்பகுதி மக்கள் இரவில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X