சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூன்று வெவ்வேறு விபத்தில் 4 பேர் பலி

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மூன்று வெவ்வேறு விபத்துகளில், நான்கு பேர் பலியாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த காந்தபாளையத்தை சேர்ந்தவர் நெடுஞ்செழியன், 47, ஆட்டோவில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பானு, 40; இருவரும், நேற்று முன்தினம் காந்தப்பாளையத்திலிருந்து, திருவண்ணாமலைக்கு ஐஸ் வியாபாரம் செய்ய, ஆட்டோவில் சென்றனர். கலசப்பாக்கம் பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த மினி லாரி, ஐஸ் ஆட்டோ மீது மோதியது. இதில், நெடுஞ்செழியன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பானு, சிகிச்சைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


வேன் டிரைவர் ரமேஷ், 40, கைது செய்யப்பட்டு கலசப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


* செய்யாறு அடுத்த, கூழமந்தலை சேர்ந்த விவசாயி மாயன், 53; இவர் கடந்த, 4ல் தனது சைக்கிளில், அருகிலுள்ள கல்லேரியில் உள்ள உறவினரை பார்க்க சென்றார். அப்போது, வந்தவாசியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் பஸ், மாயன் மீது மோதியதில் படுகாயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று உயிரிழந்தார். இது குறித்து, தூசி போலீசார் விசாரிக்கின்றனர்.


* செய்யாறு அடுத்த, வெம்பாக்கம் சுருட்டலை சேர்ந்த விவசாயி கன்னியப்பன், 55; இவர், நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, தூசி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
10-பிப்-202009:49:44 IST Report Abuse
JAYARAMAN வாகனங்கள் நேருக்கு நேர் மோதுவதை தடுக்க இப்படி, குறைந்த செலவில் செய்யலாமா. நெடுஞ்சாலைகளில் நடுவில், தடுப்புகள் இல்லாவிட்டால், ஒவ்வொரு 500 அடி இடைவெளியிலும், வண்ணம் தீட்டப்பட்ட கோல் ஒன்றை பாதுகாப்பிற்காக நடுவது பற்றி யோசிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X