இந்தியா என்ன தர்ம சத்திரமா? : ராஜ்தாக்கரே கொந்தளிப்பு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (65)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை : சிஏஏ.,வுக்கு எதிராக போராடுபவர்களுக்கு கத்திக்கு கத்தி, கல்லுக்கு கல் என்ற ரீதியில் பதிலளிக்கப்படும். சட்ட விரோதமாக வருபவர்கள் எல்லாம் குடியேற இந்தியா என்ன தர்ம சத்திரமா என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

மும்பையில் நவநிர்மான் சேனா சார்பில் சிஏஏ.,வுக்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்டது. அப்போது பேசிய ராஜ் தாக்கரே, கல்வீச்சுக்கு பதில் கல்வீச்சும் வாள்வீச்சுக்கு பதில் வாள் வீச்சும் தரப்படும். அந்த வழியில் நாடு முழுவதும் சிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு எதிராக பேரணி நடத்துபவர்களுக்கு பேரணி நடத்தி பதில் தரப்படும். சிஏஏ இந்தியாவில்பிறந்த முஸ்லீம்களுக்கு எதிரானதல்ல என்பதை மத்திய அரசு தெளிவுற விளக்கியுள்ள பின்னரும் எதற்காக அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்? சிஏஏ.,வுக்கு எதிராக முஸ்லீம்கள் எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என எனக்கு புரியவில்லை.

காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டது, ராமர் கோயில் கட்டுவது, சிஏஏ அமல்படுத்தியது போன்ற நடவடிக்கைகளுக்காக மத்திய அரசை நான் பாராட்டுகிறேன். பாக்., மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் இந்தியாவை விட்டு தூக்கி எறியப்படுவார்கள். எங்கள் நாடு என்ன தர்ம சத்திரமா? சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான விதிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மிக கடுமையாக உள்ளன. பாஸ்போர்ட் இல்லாமல் எவராவது வந்தால் அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது சிறையில் அடையுங்கள். ஒவ்வொருவருக்கும் நாங்கள் பொறுப்பாக முடியாது.

பாக்., வங்கதேசம் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இந்துக்கள் மற்றும் தலித்களிடம் ஆவணங்கள் கேட்கப்படவில்லை. இந்தியாவை போல் வேறு எந்த நாடும் மக்களுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை. இந்திய முஸ்லீம்கள், மராத்தி முஸ்லீம்கள், தேசத்தை நேசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அனைத்து சமூக விரோத சக்திகளிடம் இருந்து கவனமாக இருங்கள். மகாராஷ்டிராவை குற்றங்கள் இல்லாத மாநிலமாக போலீசார் மாற்ற வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
10-பிப்-202021:33:48 IST Report Abuse
Ravichandran செம செம, கிளம்புங்கள் அடிச்சி கிளம்புங்கள், ஒருகை பாப்போம்,
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
10-பிப்-202021:09:59 IST Report Abuse
Krishna CAA-NPR-NRC Not Required. Simple Door to Door Verification Can throw out Foreign Infiltrators
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
10-பிப்-202019:10:22 IST Report Abuse
Subburamu Krishnaswamy One more paper tiger in Thackeray scions.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X