பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : பிப் 10, 2020
Advertisement

தண்ணீர் தொட்டி இருந்தும் வீண்: தர்மபுரி அடுத்த, கொண்டம்பட்டி பஞ்., டி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு, 22 குழந்தைகள் வந்து செல்கின்றனர். இங்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன், எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதில், சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. இதன் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதால் தண்ணீர் வருவதில்லை. இதை சீரமைத்து, மீண்டும் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொட்டி இருக்கு; தண்ணீர் இல்லை: காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்தில்., பஸ் ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தைக்கு செல்லும் வழியில், மக்கள் வசதிக்காக, 2011 - 12ல் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு பின், ஓராண்டு மட்டுமே அதில் குடிநீர் வினியோகம் நடந்தது. மோட்டார் பழுதை சரி செய்யாததால், தற்போது வரை, அதில் குடிநீர் சப்ளை இல்லை. அப்பகுதியினர் மற்றும் வாரச்சந்தைக்கு வரும் விவசாயிகள், குடிநீருக்கு அவதிப்படுகின்றனர்.

காட்சி பொருளான சேவை மையம்: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கொக்கராப்பட்டி பஞ்., புழுதியூரில், பட்டா, சிட்டா, அ.பதிவேடு உள்ளிட்ட, சான்றுகளை மக்களும், விவசாயிகளும் எளிதாக பெறும் வகையில், 14.40 லட்சம் ரூபாய் மதிப்பில், கிராமசேவை மைய கட்டடம் கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், திறக்கப்படாமல் உள்ளதால், சான்றுகள் பெற, பாப்பிரெட்டிப்பட்டிக்கு மக்கள் செல்கின்றனர். எனவே, சேவைமைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X