பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்து நிலை ஹிந்தி தேர்வில் 300 பேர் ஆர்வத்துடன் பங்கேற்பு

Added : பிப் 10, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில், நேற்று நடந்த ஐந்து நிலை ஹிந்தி தேர்வுகளை, 300 பேர் ஆர்வத்துடன் எழுதினர். நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் வயது வரம்பின்றி பங்கேற்கும் வகையில் ஹிந்தி தேர்வுகள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த, 2ல் பிராத்மிக், மத்தியமா, ராஷ்ட்ரபாஷா ஆகிய தேர்வுகள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக, பிரவேஷிகா, பிரவீன்பூர்வா, பிரவீன் உதார்த், விசாரத் பூர்வா, விசாரத் உத்ராத் ஆகிய ஐந்து நிலை தேர்வுகள், தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதை நடப்பாண்டில் சென்னை தட்ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபா நடத்தி வருகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில், மாவட்டம் முழுவதிலும் இருந்து மாணவ, மாணவியர், பெண்கள் என, 300 பேர் பங்கேற்றனர். இதேபோல் நடந்த, ஹிந்தி வாய்மொழி தேர்விலும் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இத்தேர்வுகளை, முதன்மை கண்காணிப்பாளரும், பள்ளி தலைமையாசிரியருமான மணிவண்ணன், ஹிந்தி பிரசார சபாவின், தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் புஷ்பா ஆகியோர் ஆய்வு செய்தனர். தேர்வின் விடைத்தாள் அனைத்தும் பாதுகாப்பாக, சென்னை ஹிந்தி பிரசார சபாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என, தேர்வு பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X