பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : பிப் 10, 2020
Advertisement

திறக்காமல் உள்ள சுகாதார வளாகம்: வேப்பனஹள்ளி பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கடந்த, 2014ல், நான்கு லட்சம் ரூபாய் செலவில், ஆண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதற்கு, மூன்று லட்சம் ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறும் அமைத்தனர். ஆனால், இன்று வரை, சுகாதார வளாகம் திறக்கவில்லை. இப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, புதர் மண்டி வீணாகி வரும், சுகாதார வளாகத்தை பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா? பாளையம்புதூர் சமத்துவபுரத்தில், 200 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வீதிகளில், போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. கால்வாய் உள்ள இடத்திலும் மண் அடைப்பு உள்ளது. இதனால், கழிவுநீர் தேங்கி, வீதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இவ்வாறு தேங்கும் கழிவுநீரில், அதிகளவில் கொசு உற்பத்தியாகிறது. இந்த கால்வாய் அடைப்புகளை அகற்றக்கோரி, அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதை தூர்வார வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X