பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட அளவிலான திறன் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

Added : பிப் 10, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: மாவட்ட அளவிலான திறன் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி, கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவை மற்றும் சேலம் மண்டல வேலைவாய்ப்பு, மண்டல இணை இயக்குனர் லதா தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பிரபாகர், மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இதில், மண்டல இணை இயக்குனர் லதா பேசியதாவது: உலகத்திறன் போட்டிகள், இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் சீனா, ஷாங்காய் நகரில் நடக்க உள்ளது. இதற்காக நடத்தப்படும் தேசிய திறன் போட்டிக்கு, ஒரு லட்சத்து, 3,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் மாவட்ட, மாநில அளவில் திறன்போட்டிகள் நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மாவட்ட அளவிலான திறன்போட்டியில் இணைதளம் மூலம், 779 பேர் பதிவு செய்திருந்தனர். முதற்கட்ட தேர்வில் பங்கேற்ற, 252 பேரில், 105 பேர், 15 திறன்களுக்கான போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு திறனிலும் வெற்றி பெற்ற, முதல் இரண்டு போட்டியாளர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட திறன் பயிற்சி அலுவலக பயிற்சி அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட திறன் குழு உறுப்பினர் பிரசன்ன பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X