பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய அறிவியல் மாநாடு: அரசு பள்ளி மாணவர்கள் ஆய்வு கட்டுரை தேர்வு

Added : பிப் 10, 2020
Advertisement

ஓசூர்: தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில், பூனப்பள்ளி அரசு பள்ளி மாணவ, மாணவியர் சமர்பித்த ஆய்வு கட்டுரை, சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில், மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, கடந்த ஆண்டு அக்.,ல் நடந்தது. இதில், ஓசூர் அடுத்த பூனப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி, 7ம் வகுப்பு படிக்கும் மாணவி வித்யஸ்ரீ, மாணவன் சிவக்குமார் ஆகியோர், அறிவியல் ஆசிரியர் சுஜாதா வழிகாட்டுதலின் படி, 'பார்த்தீனியம் களைச்செடிகளை, அதன் கஷாயம் மூலம் தடுத்தல்' என்ற தலைப்பில், ஆய்வு கட்டுரையை சமர்பித்தனர். இதேபோல், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மொத்தம், 162 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. இதில், பூனப்பள்ளி மாணவர்கள் சமர்பித்த ஆய்வு கட்டுரை, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. நவ.,ல் நடந்த மாநில அளவிலான போட்டியில் சமர்பிக்கப்பட்ட கட்டுரை, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில், 650 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. இதில், தமிழகத்திலிருந்து, இரண்டு ஆய்வு கட்டுரைகள் உட்பட மொத்தம், 39 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. அதில், பூனப்பள்ளி மாணவி வித்யஸ்ரீ மற்றும் மாணவன் சிவக்குமார் சமர்பித்த ஆய்வு கட்டுரையும் ஒன்று. வெற்றி பெற்ற மாணவ, மாணவி மற்றும் வழிகாட்டி ஆசியர் சுஜாதா ஆகியோரை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X