சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்சில் ரூ.1 கோடி நகைகள் 'அபேஸ்'

Added : பிப் 10, 2020
Advertisement

சங்ககிரி: ஐதராபாத்திலிருந்து, கோவைக்கு, ஆம்னி பஸ்சில் எடுத்து செல்லப்பட்ட, 1.04 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் பதித்த, 21 பவுன் நகைகளை, மர்ம நபர்கள் லவட்டிச்சென்றனர்.
ஐதராபாத், பி.எம்.ஜெ., நகைக்கடை விற்பனையாளர் கவுதம், 27. அந்த கடையிலிருந்து, கோவையிலுள்ள கிளைக்கு, நேற்று முன்தினம் இரவு, வைரம் பதித்த, ஏழு நெக்லஸ், 14 ஜோடி கம்மல், ஒரு மோதிரம் என, 21 பவுன் நகைகளை பெட்டியில் வைத்து, கவுதம், மற்ற பணியாளர்கள் பிரதீப், 28, சுனில்காந்த், 32, ஆகியோர், சுவாமி ஐயப்பா ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை, 9:00 மணிக்கு சேலம் மாவட்டம், சங்ககிரி, வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே, சரவணபவன் ஓட்டலில், டிபன் சாப்பிட பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது, நகை பெட்டியை பஸ்சில் வைத்துவிட்டு, கவுதம் உள்பட மூவரும் சாப்பிட சென்றனர். திரும்பி வந்தபோது, நகை பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த நகைகள் மாயமாகியிருந்தன. இதுகுறித்து, அவர்கள், கோவை கிளை மேலாளரான, நீலகிரி மாவட்டம், பெலிதலாவை சேர்ந்த சந்தோஷ், 37, என்பவருக்கு தகவல் கொடுத்தனர். மாலை, அவரது புகார்படி, சங்ககிரி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இந்நிலையில், ஆம்னி பஸ்சிலுள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகள் மூலம், மர்ம நபர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார், இச்சம்பவத்தில், நகையை எடுத்து வந்தவர்களுக்கும் தொடர்புள்ளதா என, விசாரிக்கின்றனர். இதேபோல், 2019 டிச., 10ல், ஐதராபாத்திலிருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் எடுத்துச்செல்லப்பட்ட, ஒரு கோடி ரூபாய் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X