சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது

Added : பிப் 10, 2020
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. இவருக்கும், காங்கேய நல்லூரை சேர்ந்த ராமச்சந்திரன், 28, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியிடம் பலமுறை தனிமையில் இருந்தார். இந்நிலையில், தற்போது சிறுமி எட்டு மாத கர்ப்பமாக உள்ளார். இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ள சிறுமி கூறியதற்கு, ராமச்சந்திரன் மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ராமச்சந்திரனின் பெற்றோரிடம் கேட்டனர். அப்போது, ராமசந்திரனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர், காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து, ராமச்சந்திரனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X