வந்தவாசி: வந்தவாசி அருகே, 95 வயது ஜைன முதியவர் மோட்சமடைய, சல்லேகன் விரதம் இருந்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பறம்பூரை சேர்ந்தவர் சிம்மசந்திர ஜெயின் சாஸ்திரியார், 95; இவர், தமிழ்நாடு ஜைன சங்க முன்னாள் செயலாளர். இவரது மனைவி சரஸ்வதி இறந்து விட்டார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். சமண சமயத்தை பின்பற்றி வரும் இவர், மோட்சமடைய கடந்த மாதம் அவரது சொந்த கிராமத்தில், சல்லேகன் விரதம் தொடங்கினார். இந்நிலையில் கடந்த, 7 முதல், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த விசாகாச்சாரியார் தபோ நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர், அங்கு விரதத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE