கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா வைரஸ்' விழிப்புணர்வு கூட்டம்

Added : பிப் 10, 2020
Share
தர்மபுரி: தர்மபுரியில், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு, 'கொரோனா வைரஸ்' விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, கொரோனா வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். வட்டார மருத்துவ அலுவலர்கள், வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள், அவை பரவும் விதம், சிகிச்சை மற்றும் தடுப்பு

தர்மபுரி: தர்மபுரியில், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு, 'கொரோனா வைரஸ்' விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, கொரோனா வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். வட்டார மருத்துவ அலுவலர்கள், வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள், அவை பரவும் விதம், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். இதையடுத்து, கல்லூரி முதல்வர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. தர்மபுரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் 'கொரோனா வைரஸ்' குறித்து விழிப்புணர்வு கூட்டம் இன்று(10ல்), நடத்த அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X