8ம் வகுப்பு தனித்தேர்வு; விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

8ம் வகுப்பு தனித்தேர்வு; விண்ணப்பிக்க அழைப்பு

Added : பிப் 10, 2020
Share

ஈரோடு: தனி தேர்வர்கள், எட்டாம் வகுப்பு தேர்வு எழுத, தட்கலில் இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்ரல் நடக்கும் தனி தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வுக்கு, ஜனவரி மாதம் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தட்கல் திட்டத்தில் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். இன்று முதல், 12ம் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். தேர்வு கட்டணம், 125 ரூபாய், சிறப்பு கட்டணம், 500 ரூபாய், விண்ணப்பத்தை பதிவு செய்யும் கட்டணம், 50 ரூபாய் என, 675 ரூபாயை சேவை மையங்களிலேயே செலுத்தலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். தபாலில் அனுப்பும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X