பொது செய்தி

தமிழ்நாடு

வாரம் ஒரு உறுப்பினர் முகாம்: மக்கள் நீதி மையம் தீர்மானம்

Added : பிப் 10, 2020
Advertisement

ஈரோடு: ஈரோடு தென்மேற்கு மாவட்ட, மக்கள் நீதி மைய, செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் மண்டல, நகர ஒன்றிய செயலாளர் அறிமுக விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் தங்கவேல், இளைஞரணி செயலாளர் சினேகன், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். வரும், 2021 சட்டசபை தேர்தலில், கமல்ஹாசனை முதல்வராக்க, கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். ஈரோடு மக்களின் நீண்டகால குறைகளை கண்டறிந்து நீக்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த, வாரம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும். கமல்ஹாசனின் தொலைநோக்கு திட்டம், செயல்பாடு குறித்து பிரசாரம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆதிதிராவிடர் நல அணி மாநில செயலாளர், ஜெகதீஷ்குமார், கோவை மண்டல அமைப்பு செயலாளர் மயில்சாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X