குளித்தலையில் தைப்பூச தீர்த்தவாரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளித்தலையில் தைப்பூச தீர்த்தவாரி

Added : பிப் 10, 2020
Share
குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர்கோவில் தைப்பூச திருவிழாவில் சுவாமிகள் சந்திப்பு, தீபாராதனை மற்றும் புறப்பாடு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. எட்டு ஊர் சுவாமிகள் சந்திப்பு மற்றும் காவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்தவுடன், அதற்கான

குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர்கோவில் தைப்பூச திருவிழாவில் சுவாமிகள் சந்திப்பு, தீபாராதனை மற்றும் புறப்பாடு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. எட்டு ஊர் சுவாமிகள் சந்திப்பு மற்றும் காவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்தவுடன், அதற்கான அலங்கரிக்கப்பட்ட கடம்பன்துறை காவிரி படுகை இடத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். நேற்று காலை, 11:20 மணியளவில் திருங்கோய்மலை உற்சவமூர்த்திகள், அய்யர்மலை உற்சமூர்த்திகள் சந்திப்பு நடந்தது. 1:30 மணியளவில் பஸ் ஸ்டாண்டு காந்திசிலை முன், சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீபாராதனை, புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை, அய்யர்மலை, லாலாபேட்டை, பெட்டவாய்த்தலை, முசிறி, வெள்ளுர், திருங்கோய்மலை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X